
வவுனியா மரையடித்த குளத்தைப் பிறப்பிடமாகவும், ஆறுமுகத்தான் புதுக்குளத்தை வதிவிடமாகவும், இறுதியாக வவு/சாஸ்திரிகூழாங்குளத்தை வாழ்விடமாகவும் கொண்டிருந்த வன்னியசிங்கம் சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
பத்து ஆண்டு ஆனாலும் அப்பா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அப்பா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அப்பா!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !
பத்து ஆண்டு என்ன பத்தாயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.