யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வான்மதி விநாயகமூர்த்தி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் குடும்ப விளக்காக நின்று
எம்மை தவிக்கவிட்டு இன்றோடு
6 ஆண்டுகள் கடந்தாலும்,
என்றும் நீங்காத நினைவுகளுடன்
எம் நெஞ்சில் நீ என்றும்
நீங்காத சுடராய் வாழ்கிறாய்!
ஆண்டு பல ஆனபோதும்
உனையிழந்த தவிப்பதனில் ஏங்கி வாடுகின்றோம்...
நீ வாழ்ந்து முடிக்கும் முன்
எமைவிட்டு வாழாது மறைந்ததேனோ?
ஆண்டுகள் நூறாயினும்
எம் நினைவுகளும் வலிகளும் ஆறாதம்மா!
உன் மலர்ந்த முகம் இனி எப்போது காண்போம்....
ஆசைகளையும் கனவுகளையும் உன்னுள் அடக்கி
எம்மை பெரிதுவக்க வைத்தாய்
தினம் வந்து வாட்டும் உன் நினைவால்
நிலை குலைந்து நிற்கின்றோம்
கண் மறைந்த போதும்
நீ எம் கண்முன்னே நிற்கின்றாய்!
நீ தந்த அன்பு என்றும்
நிலைத்து நிற்க்கும் நினைவுகளாய்
உம்மோடு வாழ்ந்த பசுமையான
நினைவுகள் என்றும் எம்மைவிட்டு
நீங்காத நினைவுகளுடன்!!!
We pray her sole rest in peace. Aum Shanthi