யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வான்மதி விநாயகமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்து எம்மில் உறவாடி மகிழ்ந்த திருமுகம்
மறைந்து இன்று ஆண்டொன்று ஆகியதே...
எம் உயிர் உள்ளவரை என்றும் எம் மனதை விட்டு
அகலாது அம்மா உன் திருவுருவம்!
நிலா மகளாம் வான்மதியை நெடுந்தூரம் அனுப்பிவிட்டு
நித்தமும் நாம் கலங்குகின்றோம் நின் நினைவில் என்நாளும்.
வான்போல் பரந்த உள்ளம்
முழுமதிபோல் மலர்ந்த திருவதனம்
வாசல் திறந்தவுடன் வா! என்றழைத்து நிற்கும்
உன் வசந்த அழைப்பு எம்மில் ஊசலாடி நிற்கையில்
என்னவென்று மீண்டெழுவோம் எம்தாயே!
அச்சாணி போல் எம்முள் ஆழப்பதிந்து விட்ட
நின் வார்த்தைகளும் நினைவுகளும் எம்முள்
நித்தமும் வந்து எமை வாழ்த்தி நிற்கின்றது!
அம்மா! உன் புன்நகைப்பு என்றென்றும் எம்மனதில்
மின்னலாய் வந்து மிளிர்கிறது என்நாளும்
ஏழேழ் பிறப்பிலும் உன்நினைவில் வாழ்ந்திட
எமை வாழ்த்தி நிற்பீர் எம் கண்மணியே தாரகையே!
சாயிதன் பாதமதில் நீ என்றும் சாந்தி பெற்று வாழ்ந்திட்டே
எம் சந்ததி வாழ வாழ்த்தி நிற்பாய் எம் இராசாத்தி!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
We pray her sole rest in peace. Aum Shanthi