Clicky

மண்ணில் 30 DEC 1976
விண்ணில் 09 NOV 2023
அமரர் வனிதா ராஜகுமார் (R K)
வயது 46
அமரர் வனிதா ராஜகுமார் 1976 - 2023 கல்முனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kokila Family 13 NOV 2023 United Arab Emirates

அக்காவின் நினைவாக, நம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு, நீ மட்டும் சலனமின்றி ஆழ்ந்து உறங்கி விட்டாய். நீ உறங்கியதால் தவிக்கின்றது உன் குடும்பமும் உன்னோடு பழகிய இதயங்களும். நீ குடும்பத்தின் ஒரு பொக்கிசம், ஒரு வழிகாட்டும் நட்சத்திரம், அருகிலிருந்தும் தூரத்திலிருந்தும் ஆறுதல் மற்றும் அன்பை அளிக்கும் ஆதாரம். உன்னுடைய இதயம் தூய்மையானது, உன்னுடைய பெருந்தன்மைக்கும் கருணைக்கும் அளவே இல்லை. நீ வாழ்க்கையில் தடுமாறாமல் தைரியத்துடன் முன்னேறும் தைரியசாலி புத்திசாலி. எல்லோர் முன்னும் புன்னகையோடும் சுறுசுறுப்போடும் சுற்றி வந்த நீ இப்போது கண்ணை மூடி பார்க்க மறுப்பதேனோ, உன் மூடிய கண்ணை பார்க்க முடியாது தவிக்கும் இதயங்களை பார்க்க முடியாததாலோ? உன்னை காலன் காவிச்சென்றான், ஆனால் நீ செய்த ஏராளமான நன்மைகளையும் உதவிகளையும் அவனால் காவிச்செல்ல முடியவில்லை, அவன் உன்னிடத்தில் தோற்று விட்டான். நீ விட்டுச் செல்லும் இவ் இடைவெளியானது நீ நேசித்த எல்லோர் மனதிலும் ஆழ்ந்த வடுவாக பதிந்து விடும். நீ நேசித்த உள்ளங்களும் உன்னை நேசித்த உள்ளமும் உன்னை மனதில் நினைவுகளாக பதிந்து கொள்ளும்.. உனது இழப்பிற்கு ஒரு கணம் இரங்கல் செய்யும் அதே வேளை, உன் இழப்பு எமக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருப்பதை எண்ணி நாம் வருத்தப்படுகின்றோம். உனது வாழ்க்கையை நாமும் கொண்டாடுவோம். ஏனென்றால் மரணத்திலும் வாழ்க்கையைப் போலவே நீ எமக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கின்றாய். நீங்கள் நிம்மதியாக இருங்கள் இறைவன் மடியில். உங்களை மிகவும் நேசிப்பவர்களுக்கு உங்கள் அன்பும் கருணையும் என்றென்றும் நிலைத்திருக்கும். உங்கள் நினைவுகள் ஆறுதலளிக்கட்டும், மேலும் உங்கள் ஆன்மா நித்திய ஓய்வு பெற வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.