Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 AUG 1963
இறப்பு 13 APR 2024
அமரர் வனிதா மகேஸ்வரன்
வயது 60
அமரர் வனிதா மகேஸ்வரன் 1963 - 2024 சுருவில், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வனிதா மகேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நீங்கள் விட்டுச்சென்ற அழகான
 ஞாபகங்கள் என்றுமே வெளுத்துக்
 கலைந்து போகாது நீங்கள் தந்த சந்தோஷ
 தருணங்களிற்கு வேறு எந்த உவமையும்
 இணையாய் எங்களுக்கு விளைந்து போகாது

நீங்கள் இல்லாத உலகம்
 இருள் சூழ்ந்த முழு வெறுமையை அன்றி
 வேறெதையும் தந்து போகாது
 ஆண்டுகள் எத்தனை போனாலும்
 நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது

உங்கள் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும்
 வரை வற்றிப் போகாது
 ஆண்டொன்று கடந்தாலும் அம்மா
 உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
 எம் மனதை விட்டகலவில்லை அம்மா!

உங்கள் கரம்பிடித்து நடந்த நாட்கள்
 நீங்கள் தாலாட்டுப்பாடி உறங்கிய நாட்கள்
 அமுதூட்டிய உன் அன்புக்கரங்கள் இதயத்தின்
 ஆழத்தில் புதைந்த வேர்களாய்
 நித்தம் நித்தம் அலை மோதுதம்மா!

எங்கள் தெய்வத்தின் ஆத்மா
 சாந்தியடைய எல்லாம் வல்ல
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

என்றும் உங்கள் நினைவில்
 கணவர்,பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 21 Apr, 2024