1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வள்ளியம்மை சின்னத்துரை
வயது 84
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கிளிநொச்சி ஆனந்தபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வள்ளியம்மை சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும்
ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அம்மா
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்
தகவல்:
குடும்பத்தினர்