3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் சிறிஸ்கந்தராஜா
(அப்பன்)
வயது 54
Tribute
21
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சவுதி அரேபியா, பிரித்தானியா Mitcham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் சிறிஸ்கந்தராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்றானாலும் அப்பா - எங்கள்
அன்புத் தெய்வமே உங்கள் முகம் தேடி
தந்தையே மூன்று ஆண்டு என்ன
மூன்று யுகம் கடந்தாலும் ஏதோவொன்றாய்
உங்கள் ஞாபகம் அப்பா...
ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எம் அப்பாவே
அப்பா அப்பா என்று நாங்கள்
அழைக்கின்றோம் ஆனாலும் நீங்கள்
வரவில்லையே அப்பா
புன்னகை பூத்த பொன்முகம்
எம் கண்முன்னே தெரிகிறது அப்பா
ஆனாலும் அது நிஜமில்லை என்று
தெரிந்த பின்பு நெஞ்சு கனக்கிறது அப்பா
விழிநீர் சொரிகிறது அப்பா
வேதனையில் துடிக்கின்றோம்
பாசமிகு அப்பாவே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
????ஓம் சாந்தி????