யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்வராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட வல்லிபுரம் செல்வராசா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் இல்லம் நாடி ஓடோடி வந்தும் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்து வரும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 15-07-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.