யாழ். பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் பொடிசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இலக்கணமாய் வாழ்ந்து
ஆதவனாய் ஒளி வீசினீர்கள்
துன்பங்கள் எத்தனை வந்தாலும்
புன்னைகையோடு எம்மை அணைத்தீர்கள்
எங்கே இனி உங்களைக் காண்போம்
இங்கே இன்னொருமுறை வாருங்கள்
எங்கள் நினைவலைகளில் நீங்காது
ஒவ்வொரு கணமும் இருக்கிறீர்கள்
உங்கள் அழகுமுகம் பார்க்காமல்
உங்கள் அன்புக்குரல் கேட்காமல்
ஓராண்டு உருண்டு போய்விட்டது
அழுதழுது உங்களைத் தேடுகிறோம்
உதவுவதே உங்கள் கொள்கையாய்
ஊர்மக்களின் துயர்களைத் துடைத்தீர்கள்
உடன்பிறப்புகளை உயிராக நேசித்தீர்கள்
உங்கள் குடும்பத்தின் அச்சாணியாக இருந்தீர்கள்
வாய் நிறைய அம்மாளைக் கூப்பிட்டு
நோயெனக்கு வராது என்றீர்கள்
கதிகலங்கி நாங்கள் நிற்க
கடுகதியில் அம்மாளிடம் போனதேனோ
ஊருக்காய் நாளும் உழைத்தீர்கள்
வேராய் எம்முயர்வில் இருந்தீர்கள்
உறவுகளுக்காய் என்றும் வாழ்ந்தீர்கள்
உங்களுக்காய் நீங்கள் வாழவில்லையே
எத்தனை பிறப்பெடுத்தாலும் நீங்களே
எங்கள் தந்தையாக வேண்டுமென்று
உங்கள் அம்மாளை வேண்டுகிறோம்
எங்களுக்குள் இருந்து என்றும் வழிகாட்டுங்கள்
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரங்கள்
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிராத்திப்பதுடன் அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதர்ர்களிற்கும் கிருஷ்னபிள்ளை (செல்லக்கண்டு) குடும்பம்...