யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் பிரணவவிவேகானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-08-2026
இரண்டு ஆண்டு ஆனது கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
ஆண்டிரண்டு ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எங்கள் அன்பின் வடிவமே அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் இலக்கணமாய் பண்பின் உருவமாய் என்றும்
எங்கள் இதயத்தில் குடியிருக்கும் அன்பு தெய்வமே
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
இன்றுடன் இரண்டு ஆண்டுகள் மறைந்துவிட்டது
கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பி
வரப்போவதில்லை ஆனாலும் நீங்கள்
எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்
எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்.
உங்கள் ஆத்மா இறைவனிடத்தில் அமைதிகொள்ள
பிராத்திக்கின்றோம்