Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 07 APR 1950
மறைவு 09 DEC 2021
அமரர் வல்லிபுரம் நாகேஸ்வரன் (சிறி)
ஓய்வு பெற்ற தொழில்நுட்ப அலுவலர் - வீதி அபிவிருத்தி அதிகாரசபை
வயது 71
அமரர் வல்லிபுரம் நாகேஸ்வரன் 1950 - 2021 Chavakacheri, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு, சிங்கப்பூர், பிரித்தானியா London, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் நாகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:29/11/2022.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள்
நினைவலைகள் அப்பா!
 உங்கள் நினைவொன்று தானே
 எம்மை நிழலாய் தொடர்கின்றது
 எங்களை எல்லாம் தவிக்கவிட்டு
 எங்கு சென்றீரோ?

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க ஏன்
விண்ணுலகம் நிரந்தரமாய்
விரைந்தீரோ?

ஓர் ஆண்டு கடுகதியில்
 கரைந்தோடிச் சென்றாலும்
உங்கள் நினைவுகள் கல்மேல்
பொறித்த எழுத்துக்கள் போல்
 எங்களை விட்டு அகலவில்லை.
 ஓராயிரம் வருடங்கள்
ஆனாலும் உங்கள் நினைவாய்
வாழ்ந்திடுவோம்!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 12 Dec, 2021