யாழ்.வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சரவணையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Northolt ஐ வதிவிடமாகவும் கொண்ட வளர்மதி முரளிதரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கை ஈழத் திருநாட்டின் சிரசாய் விளங்கும் வடபால் யாழ்ப்பாணத்தில் வேதம் ஓதும் அந்தணப் பெரியோர்களும், வணிகப் பெருமக்களும், கற்றோரும், வர்த்தக விவசாயமும் தழைத் தோங்கும் யாழ் நகரின் தென்பால் உள்ள சப்த தீவின் தலையாய் விளங்கும் முடிப்பிள்ளையார் வீற்றிருந்து அருள் பாலிக்கும் புண்ணிய பூமியாம் வேலணையிலே தாயாய் விளங்கும் செருத்தனைப்பதி மகாமாரி அம்மன் ஒளி பிரகாசிக்க திருஞானசம்பந்தர் - மலர்மகள் தம்பதியின் ஆறாவது மகளாக இருபது பதினொன்று ஆயிரத்து தோழாயிரத்து ஆறுபத்தி ஆராம் திகதி அன்று அமரர் வளர்மதி அவர்கள் அவதரித்தார்
இவரை எல்லோரும் கவிதா என செல்லமாக அழைக்க அக்கா சுலோசனா, சாரதாம்பிகை, அண்ணா
கமலநாதன், கணநாதன், அக்கா ஜெயகௌரி, ஆகியோரின் அரவணைப்பில், சீராட்டு
தாலாட்டுடன் அமரர் வளர்ந்து வந்தார். இவரின் பின் இளைய சகோதரர்களாக தயானந்தன்,
காந்தன் ஆகியோரும் அவதரித்தனர்.
தனது ஆரம்பக் கல்வியை வேலணை சைவப்பிரகாசம் வித்தியாலயத்தில் பயின்றார்.
கல்வியில் ஆர்வங்கொண்டு சிறந்து விளங்கிய இவர் தனது உயர்தரக் கல்வியை வேலணை
மத்திய கல்லூரியிலும் கற்றார்.
1990 ம் ஆண்டு சரவணையை சேர்ந்த வேலுப்பிள்ளை - வில்வரட்ணாம்பாள் தம்பதியரின்
ஐந்தாவது மகனான முரளிதரன் என்பவரை மணம் முடித்து இல்லறம் சிறக்க சிறப்புடன்
வாழ்ந்து வருகையின் தவப்பயனாக ஆயிரத்து தோழாயிரத்து தொன்றூராம் ஆண்டு
'தலைமகளாய் சிந்துஷா அவதரித்தார். பின்னர் யாழ் மண்ணை விட்டு விலகி சிறிது
காலம் கொழும்பில் வசித்து வருகையில் 1995 ம் ஆண்டு இரண்டாவது மகளாய் தர்ஷிகா
அவதரித்தார்.
1999ம் ஆண்டு இலங்கை மண்ணை விட்டு லண்டன் மாநகரத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று குடியேறினார். சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகையிலே மூன்றாவது கடைக்குட்டியாக 2000ம் ஆண்டு ஹரிஷன் எனும் ஆண் குழந்தையை கண்டு மகிழ்ந்தனர். இவ்வாறு தனது கணவன். பிள்ளைகள் என குடும்பச் சிறப்போடும், பிள்ளைகளுக்கு தக்க கல்வியும் பெற்றுத் தந்து சிறந்த பெயரோடும், புகழோடும் வாழ்ந்து கணவரின் தொழிலுக்கு பக்க பலமாகவும், உறுதுணையாகவும் இருந்து அயராது பாடுபட்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்தது மட்டுமில்லாமல் சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும் தன்னால் இயன்ற பங்களிப்பை ஆற்றி வந்தார்.
தனது மூத்த மகளான சிந்துஷா business management என்ற பட்டப்படிப்பையும்,
இரண்டாவது மகள் தர்ஷிகா Biomedical Science (BSc) மற்றும் Doctor of dental
Surgery (DDS) dentistry பட்டப் படிப்பையும், மகன் ஹரிஷன் Aerospace
Engineering பட்டப் படிப்பையும் நிறைவு செய்ததைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியில்
திளைத்திருந்தார்.
ஊரில் உள்ள ஆலயங்களின் மீது கொண்ட பற்றும். பக்தியும் காரணமாக தன்னால் இயன்ற
திருப்பணிகளை தவறாது ஆற்றிவந்தார். குடும்பத்திற்கு நல்ல தலைவியாகவும்,
பிள்ளைகளுக்கு நல்ல தாயாகவும், சகோதரர்களுக்கு நல்ல சகோதரி யாகவும்,
மைத்துனருக்கு நல்ல மைத்துனியாகவும், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் என
அனைவரோடும் அன்பு பாராட்டி கூடி மகிழ்ந்திருந்தார்.
தனது மூத்த மகளான சிந்துஷாவை வவுனியாவைச் சேர்ந்த பவேசன் என்பவருக்கு மணம்
முடித்து வைத்து அதன் வழி யாத்ரா, பைரா, ருத்ரா ஆகியோரை பேரப்பிள்ளைகளாக கண்டு
மகிழ்வுற்றிருந்தார்.
வாழ்வில் எல்லா உறவும், உயர்வும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வரும் வேளையில்
நோயினால் பாதிக்கப்பட்டு தனது. 58வது வயதை பூர்த்தி செய்த நிலையில் 29.07.2025
அன்று இவ் பூவுலகை நீத்து அம்மன் திருவடியை சென்றடைந்தார். அன்னாரின் ஆத்மா
சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி! ஓம் சாந்தி !!!
We are deeply saddened bt the passing of Kavitha. A truly gentle and kind hearted soul, she touched the lives of many with quiet strenth and ge genuine warmth. Our heartfelt condolences go out to...