

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லனையைப் பிறப்பிடமாகவும், பரந்தன் உமையாள்புரம், கிளிநொச்சி உதயநகர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், டென்மார்க்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த வாலாம்பிகை மாணிக்கராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மண்ணுலகை பிரிந்து பன்னிரு மாதங்கள் சென்றதம்மா என்ன
நடந்தது? என்று கனக்கிட்ட நாட்கள் அதற்குள் ஆண்டு ஒன்று ஆகிவிட்டதே,
பட்ட துயர் ஆறமுன்னர் பாதியில் சென்றதேன் அம்மா?
அன்பின் வடிவமே அம்மா.
அஹிம்சையின் திரு உருவே.
அழியா புன்சிரிப்பை கொண்டவளே.
அன்புடன் எமை பெற்றவளே.
ஐயா, அம்மாச்சி என்று மக்கள், மருமக்களை தாங்கியவளே,
உன் அன்பு முகம் பாராமல்
விண்ணகம் சென்றதேனோ…?
அன்புடன் அறுசுவை உணவு
ஊட்டி வளர்த்த அம்மம்மாவே,
அவனியில் எமை அரவணைக்க
நீங்கள் இல்லாமல் கலங்குகின்றோம்.
பிறப்போடு இறப்பு இணைந்த தெனினும் இழப்பினை நெஞ்சம் ஏற்பதில்லை.
அன்பின் உறவாய் எம்முயிரினுட் கலந்த அம்மா?
எதையும் நினைப்பதற்கு மனமே இல்லையம்மா.
கேட்கிறதா அம்மா எமது இதயக் குமுறல்?
விடை தாருங்கள் நீங்கள் இருக்கும் மோட்சக் கதவை திறந்து.
ஓவியமாய் அமர்ந்து விட்ட எம்முயிரே.
கண்ணிமைக்கும் கணப் பொழுதினை விட
கடு கதியாய் கரைந்ததுவோ ஈராறு மாதங்கள்.
தாண்டுகிறோம் காலமதை அம்மா உன் நினைவாலே,
நீ இருந்த எம்முலகு நிர்க்கதி ஆனதம்மா.
எங்கள் தெய்வம் நீ தானே அம்மா, அம்மா, அம்மா.
என்றும் உங்கள் ஆத்மா சாந்திக்காக
உங்களை தன்பக்கம் ஈர்த்த இறைவனை மனம் கூம்பு தொழுகின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
"உயிர்ப்பும் உயிரும் நானே என்னில்
விசுவாசம் கொள்பவன் இறப்பிலும்
வாழ்வான்".