யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லனையைப் பிறப்பிடமாகவும், பரந்தன் உமையாள்புரம், கிளிநொச்சி உதயநகர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், டென்மார்க்கை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வாலாம்பிகை மாணிக்கராசா அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, கனகம்மா(குளத்தடிமாமி) தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்ற கந்தப்பு, பாக்கியம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
மாணிக்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன்(மலைப்பாம்பு- இலங்கை), குலமணி(கனடா), பத்மநாதன்(கனடா), பாலேந்திரன்(இலங்கை), சுகிர்தமலர்(இலங்கை), காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(இலங்கை), விக்னேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற ஞானமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மோகனதாஸ், சுபாசினி(மதி- டென்மார்க்) , மோகனராஜ்(ராசன்- டென்மார்க்) , பிரியதர்சினி(டென்மார்), கஜந்தினி(காலா- டென்மார்க்), யுவாணி(சுவிஸ்), பிரதாப்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
சந்திரராஜ்(டென்மார்க்), வித்தியலோஜினி(டென்மார்க்), ஸ்ரீமுருகதாஸ்(டென்மார்க்), ரமணன்(டென்மார்க்), பிரசாந்(சுவிஸ்), டிலாணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரிஷி, மகின், கயல், திருஷா, கிர்திக், ஜனுசன், கனிஸ்கா, சந்தோஸ், மாதிஸ், கவிஸ்சன், ஜஸ்விதா, விஸ்ணு ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2020 திங்கட்கிழமை அன்று குடும்பத்தாருடன் மட்டும் நடைபெறும். தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக உங்கள் வருகையை தவிர்த்துக்கொள்ளும்படியும் உங்கள் இரங்கல் செய்திகளையும், அனுதாபங்களையும் தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.