நன்றி நவிலல்
பிறப்பு 17 AUG 1964
இறப்பு 15 APR 2021
திரு வாகீசன் துரைராஜா
வயது 56
திரு வாகீசன் துரைராஜா 1964 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாகீசன் துரைராஜா அவர்களின் நன்றி நவிலல்.

நீர் மண்ணுலகு விட்டு
விண்ணுலகு விரைந்து
31 நாட்கள் ஆகிறது

ஓரு மாதம் ஓரு நிமிடங்களாக பறந்துவிட்டது
ஆறவில்லை எம் கவலை மாறவில்லை எம் துயரம்
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கிறது எம் இதயம்
உம் அன்பு முகத்தை ஆசையாக ஒரு தரம் காண்போமா என்று

ஆருயிர்க் கணவாராக, அருமை தந்தையாக,
அன்புச் சகோதரனாக. பாசமிகு மகனாக ஓவ்வொரு உறவுகளுக்கும்
உற்றவனாக பாசத்தை வழங்கிய உங்கள் நினைவு
எங்களை விட்டு என்றுமே நீங்காது
அமைதியாக உறங்குகள் அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

அன்னார் சிவபதம் அடைந்த செய்தி கேட்டு நாம் துயருற்ற இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமுகவலைத்தளங்கள் ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும்  அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளையங்கள், மலர்கள் சாத்தியவர்களுக்கும் அன்னாரின் இறுதி சடங்களில் கலந்து கொண்டவர்களுக்கும் உணவு அளித்தவர்களுக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் அன்னார் ஆஸ்பத்திரியில் அனுமதித்த நாளில் இருந்து இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.