8ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 08/07/2023
பாசத்தின் உறைவிடமே அப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
வருடங்கள் எட்டு ஆனதே
வரமாக எமக்கு கிடைத்த ஐயா
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில்
அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத்
தளிர்களாய் எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்
எங்களின் இதய தெய்வமே,
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எமை விட்டு நீர் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்