உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமாய் தாலாட்டும் அன்னையாய் சீராட்டும் தந்தையாய் நீங்கள் வாழ்ந்த காலங்கள் எங்களால் மறக்க முடியாது
ஆண்டுகள் ஐந்து ஆனாலும் அழியவில்லை எம் சோகம் எத்தனை யுகங்கள் ஆனாலும் உங்கள் நினைவு எம்மை விட்டு அழியாது!
ஆலமரமாய் எம்மைக் காத்த அன்புத் தந்தையே உங்களை என்றென்றும் போற்றுகிறோம் எங்கள் கண்களில் இருந்து நீங்கள் மறைந்தாலும் ஆண்டு ஐந்து ஓடி மறைந்தாலும் விழும் மழைத் துளியும் வீசுகின்ற காற்றும் வாழுகின்ற காலம் வரை உங்கள் நாமம் வாழும் ஐயா..
உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் குலதெய்வம் ஐய்யனாரைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.