Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 13 MAY 1925
இறப்பு 13 JUN 2020
அமரர் வைத்தியலிங்கம் பேரம்பலம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ் இந்து ஆரம்ப பாடசாலை, யாழ். சன்மார்க போதனா ஆங்கில வித்தியாசாலை, வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயம், கொக்குவில் நாமகள் வித்தியாலயம், கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை.
வயது 95
அமரர் வைத்தியலிங்கம் பேரம்பலம் 1925 - 2020 சரவணை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் , கனடா Toronto, தலையாழி ஆகிய இடங்களை வதிவிடமாகவும்,   கொண்ட வைத்தியலிங்கம் பேரம்பலம் அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட  எமது அன்பு தெய்வம் வைத்தியலிங்கம் பேரம்பலம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை ஊடாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
லங்காசிறி ஊடகத்தின் மூலமாக ஆழ்ந்த அனுதாபங்களை அக்கறையுடன் தெரிவித்த உற்றார் உறவினர்கள் நண்பர்கள், மாணவர்கள் எம்மைப்போல் இடம்பெயர்ந்த இனிய அயலவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், நினைவுரைகள் வழங்கியவர்களுக்கும், மேலும் அன்னார் சுகமற்ற வேளையில் வைத்திய சாலையில் சிகிச்சை அளித்த வைத்திய கலாநிதிகளுக்கும், தாதிமார்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் வைத்திய சாலையில் வந்து பார்த்து வாஞ்சையுடன் பிரார்த்தித்து சென்றவர்களுக்கும்  இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அமரர் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகளிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்து ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்த அனைத்து அன்புள்ளத்தினர்கும், இக்கிரியைகள் அனைத்தையும் சிறப்புற நடாத்திய குருக்கள் அனைவருக்கும், மறைவுச் செய்திய பிரசுரித்த லங்காசிறி இணையத்தளத்திற்கும் மற்றும்  உதயன் பத்திரிகையினருக்கும், இந் நிகழ்வுகளை சிறப்புற காணொலியில் பதிவுசெய்த Jeevan Studio அவர்களுக்கும் இறுதி நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்த Maya Studio Youtube RMM Tv அவர்களுக்கும், நினைவு மலரில் தங்கள் நினைவுகளைப் பதிவிட்ட அன்பு உள்ளங்களுக்கும் நினைவு மலரை சிறப்புற வடிவமைத்து அச்சிட்ட Andra Digital Image பதிப்பகத்தார்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 40 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.