

யாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் உதயலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா என்று அழைத்த குரல்
இன்னமும் என் காதுகளில் ஒலிக்கிறது
அப்பா, அம்மா உடன் பிறப்புக்கள் என்று
அன்புடன் அரவணைத்து வாழ்ந்த நாட்கள்
எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை உமது
உயிர் மூச்சு தான் காற்றுடன் கலந்து ஓராண்டு
என்று நினைக்கையில் நெஞ்சு தான் வலிக்கிறது
உமது ஆத்மா சாந்தி பெறுவதாக
அன்புடன் அரவணைத்து ஆறுதலாக பேசி
ஒன்றாக கூடி வாழ்ந்த நாட்கள் எம் நினைவைவிட்டு நீங்காது
ஒடி அலைந்த கால்களும்
தேடி அசைந்த கைகளும் ஒய்ந்து தான்
ஒடி மறைந்து ஓராண்டு காலம் சென்றது
என் உள்ளம் துடித்து நினைவை இழந்து
நிம்மதியை தேடி ஓடி ஆண்டவன் திருவடியை
நாடி உங்கள் ஆத்மா சாந்தி வேண்டி
வணங்கிப்பணிகிறோம்
அப்பா அப்பா என்று அழைத்த போது
அன்புடன் அரவணைத்து ஆதரவாக பேசி
இன்முகம் காட்டிய எங்கள் ஆருயிர் அப்பாவே
பக்குவமாய் எமை வளர்ந்து காத்து கல்வி அறிவுதனை
ஏற்றமுடன் அளித்து வையத்துள் வளமாய்
வாழ வழி காட்டினீர்கள் எங்கள் ஏற்றம் கண்டு
உவகை கொள்ளும் நேரத்தில் எங்களை விட்டு
விண்ணுலகம் சென்றதேன் நீங்கள் மறைந்து
ஓர் ஆண்டு ஆனாலும் இன்றும் என்றும்
எம் நெஞ்சத்தில் உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைவதாக
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!