

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞலி.
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
அழியாது உன் நினைவு என் அன்பு மகனே!
என் உயிர் நிலையாய் இருக்க உன் உயிரை
பறித்து விட்டானே- ஐயா
பெற்றவளை தவிக்க விட்டு, உன் உடன் பிறப்புகளை
கதற விட்டு, நித்திரை போல் கிடந்தாய் ஐயா!
நிலைகுலைந்து நாம் நின்கிறோம்...
சொந்தங்கள் உறவுகளை மதித்து பாசமென்னும்
பிணைப்புடன் நேசமுடன் பழகி வந்தாய்
நண்பர்களை தூக்கி சுமந்தாய், நாட்டைக் காப்பாற்ற
புறப்பட்டாய், போடாடினாய், தன்னலம் அற்ற
தலைவன் ஆனாய், தோழர்களுடன் தோள் கொடுத்தாய்
தன்னம்பிகை ஒன்றே உன் பலம் என்றாய்
தளராத உன் மனம் அன்று தடுமாறி போனதேனோ!
விதி என்னும் அம்பினால் நீ அடிபட்டு மாயந்தது ஏனோ!
நீங்காத நினைவுகள் தந்து நீண்டதூரம் சென்றதேனோ
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறவில்லை உங்கள்
நினைவுகள்.... அகவில்லை அன்பு முகம்!
ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!
May his soul rest in peace.