

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சோமசுந்தரம் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கணபதிப்பிள்ளை உடையார் அவர்களின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், சீதேவிப்பிள்ளை தம்பதிகள், சோமசுந்தரம் ஞானமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம், சோதீஸ்வரி(திரவியம்- முன்னாள் உபதபால் அதிபர் நெடுந்தீவு மேற்கு) தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும்,
நரேந்திரன் நவயோகம், யோகராஜா தங்கமுத்து, பராசக்தி, சிவராஜா, காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, ஞானராஜா, சுந்தரராஜா, செல்வராஜா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(கணேசானந்தாஸ் ஸ்தாபகர்), சுவாமிநாதன் ரதிதேவி தம்பதிகளின் அன்புப் பெறா மகனும்,
இராஜேஸ்வரன்(முகாமையாளர் - ரொரன்ரோ திருச்செந்தூர் முருகன் ஆலயம் - கனடா), செல்வநாயம்(தபாலகம் - நெடுந்தீவு), மேகலா(கனடா), பாமினி(கனடா), கிரிஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றஞ்சிதமலர், மகேஸ்வரி, காலஞ்சென்ற கருணாநிதி, விவேகானந்தன் பிரதாபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிகா, சோபனா, விபுஷன், லவன், கிரிஷாந், சிந்து, கஜி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கலைஅரசி, பிரதீபன், யசோதினி, குணாளினி, துவாஷிகா, தனுஷன், அரிஷன், பிரணவி, சஜீவன், சருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஜன், விதுஜன், சுருதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May his soul rest in peace.