
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கதிரவேலு அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகத்தைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், சங்கரப்பிள்ளை வள்ளியம்மை மற்றும் சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பராசக்தி மற்றும் வள்ளியம்மை(ஆசிரியர்) ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கணேஸ்வரன், பிறேமராணி, தங்கேஸ்வரன்(இந்திரன்), சத்தியேஸ்வரன்(ரூபன்), பவானி, கிருபாநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ருபேந்திரராசா, பவானி, வக்சலா, பாலச்சந்திரன், கோபாலநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், கைலாயப்பிள்ளை, சுப்பிரமணியம், குமாரசாமி, குணநாயகி மற்றும் யோகம்மா, தையல்நாயகி, பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, தங்கம்மா, கமலம், நாகலிங்கம், கனகரட்ணம், நடராசா, செல்லம்மா, சாம்பசிவம், ஆறுமுகம், கிருஸ்ணபிள்ளை, அன்னக்கிளி, செல்வமணி, முத்துக்குமார் மற்றும் பூரணம், பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நேசிகா, அஸ்வின், சிவராஜி, விஸ்ணு, பவிஷன், சறீன், அபினா, பவித்திரன், திவ்யன், சஸ்டி ஆகியோரின் அன்புப் பேரனும்,
நெபீஸ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வட்டக்கச்சி 283, சிவசுந்தரம் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் மு.ப 11:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details