

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குமரகோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் ஜெகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு தெய்வம்
அப்பா உயிரெழுத்து வரிசையில்
உணர்வினை வரைந்து உள்ளத்தை
கனப்படுத்திய தந்தையே
விண்முட்டும் கோபுரங்கள் ஆயிரம்
இந்த மண்மீது இருந்திடினும்
எம் கண்கண்ட தெய்வம் எம்தந்தையே
எம் முகவரிக்கு முதல் எழுத்து
எம் அகரங்களுக்கு தலை எழுத்து
நாம் முன்நின்று முகம் காட்ட
தன்னை தந்து உருவாக்கிய சிற்பியே
குடும்ப சுமைகளில் அன்னைக்கு ஊன்றுகோல்
இடுக்கண் சமயங்களில் இவரின் சொல் ஆறுதல்
மனம் நோகும் வேளையில் இவர் வாய்மொழி மயிலிறகு
குடும்ப வட்டத்திற்குள் உலகத்தையே உற்றுநோக்கிய
தத்தவஞானியே பல பேர் மணவாழ்வை முன்நின்று
நடத்திய உத்தமனே
இனிமை உங்களது குணம்
மென்மை இவர் தரும் தண்டனை
மனம் எல்லாம் மழலைகள் சிந்தனை
அன்பு இவரது மந்திரம்
பிறருக்கு கொடுப்பது இவரது நற்குணம்
இவரிடம் இருப்பதில்லை என்றும் தந்திரம்
கடமை தான் இவரது புகழிடம்
இறைவனிடம் உறவாட விருப்பம் ஏராளம்
எம் தந்தை எமைவிட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்தார்.
எம் கண்களில் கண்ணீர் தான் இன்று ஆறாகும்
இறைவன் பாதத்தில் அமைதியுடன் இளைப்பாறுங்கள்
இறுதி மூச்சு வரை உம் நினைவுகள் நிழலாகும்
எத்தனை ஜென்மமும் உங்களுக்கு மட்டும்
பிள்ளைகளாக இருக்க இறைவா வரம் ஒன்று தரவேண்டும்
அதுபோதும் எங்களிற்கு உங்கள் அன்பிற்கும்
அமைதிக்கும் கனிவுக்கும் மரியாதைக்கும்
உங்கள் பெருமைக்கும் என்றென்றும் பிள்ளைகளாய்
நாங்கள் தலை வணங்குகின்றோம்
இறந்தவரென்பதை மறப்போம்
எங்கள் குலதெய்வம் போல் வணங்குவோம்
ஒரு மரத்தின் கிளைகளாக நாம்
வாழ்ந்திடுவோம் அப்பா
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்