

அமரர் கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்(05 DEC 1926 - 02 JUN 2021):
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
எங்கள் இதயக் கோவில்களில்
என்றும் நீங்கா இடம்பெற்று வீற்றிருக்கும்
உங்களை எங்கள் பாசப் பூக்கள் தூவி...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அமரர் வைத்திலிங்கம் ஞானேஸ்வரி (26 FEB 1936 - 05 APR 2022):
மலேசியா Bukit Mertajam ஐப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் ஞானேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
அன்னையே! ஓராண்டு போனதம்மா உலகிலேயே சிறந்த தெய்வம் தாய் மட்டுமே.. உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.! இந்த உலகில் அளவிட முடியாத ஒன்று உள்ளது என்றால் அது தாயின்...