யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவப்பிள்ளை திருனாவுக்கரசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உயிர் தந்து உடல் தந்து உழைப்பையும் தந்தீர்கள்!
உடனிருந்து அரவணைத்து உணவளித்துக் காத்தீர்கள்
துணிவுடன் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்தீர்கள்
தூயவரே நாம்வாழ வழியமைத்துத் தந்தீர்கள்!
எங்களின் உயர்வுக்கு நீங்களே வழிகாட்டியப்பா
உங்களின் பிரிவின்றி வேறுகுறை இல்லையப்பா
எங்களின் தோட்டத்தில் வாசமலர் நீங்களப்பாஎ
ங்களின் மாலையிலிருந்து ஏன்வாடி உதிர்ந்தீர்கள்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.