Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 APR 1947
இறப்பு 08 MAR 2020
அமரர் வைரமுத்து சுப்ரமணியம் (மணியம்)
ஓய்வுநிலை சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர், முன்னாள் வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர், தமிழ் தேசிய கூட்டமைப்பு- கோப்பாய், முன்னாள் பொருளாளர்- முத்துமாரி அம்மன் கோயில், பழைய மாணவர் சங்கம் கிறிஸ்தவ கல்லூரி, கோப்பாய்
வயது 72
அமரர் வைரமுத்து சுப்ரமணியம் 1947 - 2020 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சுப்ரமணியம் அவர்கள் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வைரமுத்து, காலஞ்சென்ற நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்ஸன்(மயூரன்- Managing Director EIM construction and consultant pvt ltd, உரிமையாளர்- Mayoo construction civil Engineer) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சங்கீதா(வைத்திய அதிகாரி- தள வைத்திய சாலை, பருத்தித்துறை) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தங்கம்மா, இரத்தினம், சிவகாமிப்பிள்ளை(கனடா), காலஞ்சென்ற ஐயாத்துரை, மகிழ்மலர்(கோப்பாய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுவேந்திராணி ஸ்ரீஸ்கந்தராசா(பிரதேச முகாமையாளர் அரசாங்க மரக் கூட்டுத்தாபனம்), துஷ்யந்தின்(கனடா), பிரபாகரன்(லண்டன்), ஸ்ரீகரன்(ஜேர்மனி), கிருபாகரன்(லண்டன்), பவானி(லண்டன்), புஸ்பராஜா(கனடா), குகேந்திரராஜா(சுவீடன்), மகேஸ்வரன்(சுவீடன்), ரஜனி(சுவீடன்), ரஜிந்தன்(சுவீடன்), குமுதினி(கனடா), காமினி(கனடா), முரளிதாசன், சசிதரன்(கனடா), ஜெயதரன்(லண்டன்), சுகந்தி, நிஷாந்தி, சகிலா(லண்டன்), சுதாகரன்(கனடா), சுரேஸ்கரன்(கனடா), வசீகரன்(இத்தாலி), அசோக்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

மிதுர்னன்(மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி), பவித்ரன்(மாணவன்- யாழ். இந்து ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கோப்பாய் கந்தன்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 07 Apr, 2020