யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், மூளாய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட வயிரமுத்து கிருஸ்ணபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பை விதைத்த அப்பாவே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து 31 ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!
கலையாத உங்கள் முகமும் கள்ளமில்லா
உங்கள் சிரிப்பும் அப்பா இனி
காண்பது எப்போது?
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்றழைக்க நீங்கள்
எனதருகில் இல்லையே!
இன்றும் என்னை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை
காணிக்கையாக்குகின்றேன் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 27-05-2026 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணிக்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் , தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.