அமரர் வைரமுத்து சின்னத்தம்பி: இறைபதம் -30.11.1995
பாரியார் அமரர் சிவகாமிப்பிள்ளை சின்னத்தம்பி: இறைபதம் -07.08.1995
யாழ். மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து சின்னத்தம்பி, சிவகாமிப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்குயிரான என் தாயே. தந்தையே!!
உயிர் வாடினேன் உங்கள் மறைவாலே
மண்ணுலகு வாழ்கை முழுமை பெற்று
விண்ணுலகு சென்று முப்பது ஆண்டுகளாயின
ஒரே ஆண்டைத் தேர்ந்தீர்கள் மரணத்தில்
ஒருசேர விண்ணோக்கிய பயணத்தில்
எனைச் செதுக்கிய சிற்பியே, அன்னையே
பிரிவால் வாடுகிறேன் உம் மைந்தன்
முன்செய் தவப்பயனின் கருணைக் கடலே
பண்பால் நீடு புகழ் கொண்டவரே,
அன்புருவான என் அருள்த் தந்தையே- உங்கள்
மென் சொற்கள் என் காதுகளில் எதிரொலி
இன்றும் மறக்கமுடியாத உம் அன்பு பொழி
அன்போடு பண்போடு அயாரமல் காத்தவரே
எண்ணில் நடந்தவை எல்லாம் நேற்றுப்போல்
எல்லாமே நெஞ்சுக்குள் பதிந்த நிகழ்வுகள்
மார்மீதும் தோள்மீதும் சுமந்து வளர்த
பேரர்கள் தேடுகிறார் பிணைபால் இன்றும்
உங்களின் புன்னகை தவழும் சாந்த முகம்
எங்கள் முன் என்றென்றும் நிலைத்திருக்கும்
உங்களுடன் வாழ்ந்த இனிய நினைவுகள்
எந்தக் காலத்தாலும் மாற்ற முடியாதவை
எங்கள் ஜென்மத்தில் உயிருள்ளவரை
உங்களை மறவோம் என்றென்றும்
தங்களின் நினைவு தரும் துயர்களுடன்.
இன்றும் துளிர்த விழிநீரால் அர்ச்சித்தே
பாத கமலஙகளில் மலராய்ச் சொரிகின்றோம்
இறையடி நிழளும் முத்திப் பேறாய வீடும்
நிறைவாக அருள இறைவனை வேண்டுகின்றோம்...