திரு வாகீசன் சுந்தரலிங்கம்
வயது 44
திரு வாகீசன் சுந்தரலிங்கம்
1980 -
2024
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வையகத்தில் வாழ ஆண்டுகள்
பல இருக்க வாகீசா, -- உன்
வாழ்வு போதும் என்று -நீ
வான் உலகு சென்றாயோ ?
மாமா ,மாமி என அன்போடு - நீ
அழைக்கும் அழைப்பினிலே-- நாம்
அகம் மகிழ்வோமே வாகீசா !
மாமா ,மாமி என்று- நீ
எழுந்து ஒரு தடவை -எமை
அழைக்காயோ வாகீசா ??
காலத்தின் கோலத்தால் நோய் வந்து- உன்னைத் தழுவ சிறிதேனும் எண்ணவில்லை -- உன்னை முழுதாய் விழுங்க வந்த காலன்
நோய் வடிவில் என்று..
சிகிச்சையின் போதும் சிந்தை கலங்காது தெளிவாகத்தானே-உன்
மாமனுடன் தொலைபேசியில் உரையாடினாய் . வெகு விரைவில் வந்து உங்களைப் பார்ப்பேன் என்றல்லோ சொல்லியிருந்தாய்.-- எல்லாம் பொய்யாகிப் போனதே மருமகனே !-உன்
மாமன் காதில் இடியாய் இறங்கியதே - உன் இழப்பின் செய்தி !!
உன் அப்பாவை பிரிந்த மனதில்
கவலையின் காயங்களின் வடுக்கள் -இன்னும் ஆறவில்லையே வாகீசா ! -- உன்
உறவுகள் மனம் கலங்கி மதி கெட்டு நிற்க , -- உன் தந்தையுடன் நீயும் துணைக்குச் சென்றாயோ ??? நினைக்கவே மனம் வெடிக்குதைய்யா மருமகனே!
ஆண்டவன் அடியிலே உன் ஆத்மா சாந்தி அடைய வேண்டி நிற்கின்றோம் ஐயா !
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி !!!
Write Tribute
My Deepest condolences Dear Raji Akka, I am deeply sorry for the loss of your beloved son, Vagesan. Words cannot express the grief I feel for your family during this unimaginable time. Vagesan was...