யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வாகீசன் ஜெயரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 08-12-2025
எங்களை விட்டுச்சென்று ஓராண்டு கண்ணீரில் கரைகின்றது.
நேற்றுப்போல் இன்னும் ஓயாமல் உங்களோடு
பேசிக்கொண்டே இருக்கிறோம் கனமான இதயத்துடன்.
உங்களைக் காணாமல் தவிக்கும் பொழுதெல்லாம் எங்கள் உள்ளம்
ஏக்கத்தில் கண்ணீர் வடிக்கிறது உங்கள்
பேச்சொலி கேட்கவில்லை, திருமுகம் காணவில்லை,
நாங்கள் உங்களுக்காக எண்ணியது ஏராளம் உள்ளது.
இறுதியில் ஏமாற்றம் மட்டுமே எமதானது.
ஆயினும் உள்ளத்தில் உறவாடி நிற்கின்றது
உங்கள் நினைவுகள் எங்கள் இதயத்தில் எப்பொழுதும்!
உங்களைக் காணாமல் உள்ளம் வாடுதிங்கே
எங்களை எல்லாம் மறந்து விட்டு
இமைமூடிச் சென்றதெங்கே
இறைவனடி சேர்ந்திடவே எம்பெருமான் அழைத்தானோ
இல்லையந்த எமனும்தான்
நேரத்தோடு அழைத்தானோ
பாரினில் பாரியாரை யாருமின்றித் தவிக்க விட்டு
பெற்றெடுத்த பிள்ளைகளைத் தந்தையின்றித் தவிக்கவிட்டு
காலனவன் கணக்கினை கணநேரமதில் முடித்தானோ
கண்துடைக்கத் துணையின்றி
காயமது ஆறாமல் கல்லறையில்
வேதனையில் வாடுகிறோம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றென்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
There are no goodbyes. Where ever you'll be, you'll be in your family's and our heart.