யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உருத்திரமூர்த்தி பிரசாத் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயாரின் குமுறல்...
நாமிருக்க நீ சென்றதேனோ
அன்பு மகனே!
உன் புன் சிரிப்பைப் பார்த்து
பூரிப்படையும் எங்கள் முகம்
உயிர் பிரிந்து
வாடிய உன் முகத்தை நினைத்து
சொல்ல முடியாத துயர் கொண்டதையா!
சின்ன வயதில் உன்னைத் தோள் மீது
தூக்கிச் சென்ற எம் தோள்கள்- இப்போ
ஆண்டுகள் இரண்டானாலும்- உன்
உடல், ஆவி அத்தனையும் சுமக்கின்றேன்!
சகோதரர்கள் பேதலிப்பு...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
பிரியமான பிரசாத்...!
எமைவிட்டு பிரிந்ததேனோ?
எம் மனம் பரிதவிக்குதையா
எப்போ இனி உமை காண்போம்.
தேடியே செல்வம் சேர்க்க- நீ
நாடியே சென்றாய் நாடு கடந்து- உன்
நினைவோடு நாமிருக்க- அதை
கனவாக்கி சென்றுவிட்டாய்
ஆண்டுகள் இரண்டானாலும்
ஆறாது எம்மனம்
உம் பிரிவால் வாடுகின்றோம்
தேற்றுவாரின்றி...!
ஆண்டவனின் மலரடியில்- நீர்
அன்புடனே உறங்கிடுவீர்...!