
யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பிள்ளையார் கோவில் முறிகண்டியை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதய வதிவிடமாகவும் கொண்டிருந்த உமா கணேசகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று கடந்தாலும் அம்மா
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!
உன் கரம்பிடித்து நடந்த நாட்கள்
நீ தாலாட்டுப்பாடி உறங்கிய நாட்கள்
அமுதூட்டிய உன் அன்புக்கரங்கள்
இதயத்தின் ஆழத்தில் புதைந்த வேர்களாய்
நித்தம் நித்தம் அலை மோதுதம்மா!
பிள்ளைகள் எங்களை வளர்ப்பதை.
பிறவியின் உயர்வாய் நினைத்தீர்கள்..
பேரப்பிள்ளைகளைக் கூட
நீங்கள் பிரியமாய் அறிவூட்டி வளர்த்தீர்கள்!
வானத்தின் நிலவாய் வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும் வாழும் உங்களுக்கு
எங்களது நினைவஞ்சலிகள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.