Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 22 APR 1945
இறப்பு 10 JUN 2024
திருமதி உலகநாயகி பாலசிங்கம்
வயது 79
திருமதி உலகநாயகி பாலசிங்கம் 1945 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு கிழக்கு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட உலகநாயகி பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உயிருக்குள் அடைகாத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே வாழும் தெய்வம் அம்மா
ஆயிரம் சொந்தங்கள் பக்கத்தில்
இருந்தாலும் அன்னையே
உன் போன்று அன்பு செய்ய யாரும்
இல்லை இவ்வுலகில்.......

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 10-07-2024 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவிருப்பதால், அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பத்தினருமாக வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
105 Latimer Ave,
Angus Ontario,LOM 1B5

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.