மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Cornwall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் ராகவி அவர்களின் நன்றி நவிலல்.
உன்னைக் காணாத எம் கண்கள்
நித்திரையைத் தொலைத்துவிட்டு
நீரை வடிக்குதம்மா!!
பாசம் வளர்த்த பூமகளே - உந்தன்
நேசம் மறப்பது எவ்வாறு
காலன் வந்து எடுத்தானோ - எங்கள்
இனிய மகளே உன் உயிரை
நற்பண்புகளால் நிறைந்த மகள்
நல் வாழ்வு காட்ட வந்த மகள்
பெரு வாழ்வு வாழ்வாய் என்றிருந்தோம்
இன்று வெறுமையிலே வாடுகின்றோம்...
உன் ஆத்மா பூரண சாந்தி பெற
எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றோம்...
அன்னாரின் மறைவுச்செய்திக் கேட்டு நேரில் வந்தும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி வழியாகவும், இணையத்தளங்கள் வழியாகவும் ஆறுதல் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், மலர்வளையம் அனுப்பியவர்கள், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.