யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Livry-Gargan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துதிமதிதேவி பாக்கியராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
சகோதரர்கள்
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரியே!
உன் பிரிவு எம்மை உருக்குதம்மா
எங்கள் அன்பு அக்காவே
உன்னை இழந்துவிட்டோம் அது உண்மைதான்....
எங்களின் நினைவுகளைக் கூடவெறும்...
நினைவுகளாகவே துலைத்து விட்டோம்....
இப்போது தேடுகின்றோம் உன் எதிர்காலத்தையல்ல....
ஒவ்வொரு நினைவிலும் நீ இன்னும்
எங்களுடன் இருக்கின்றாய்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
மகள்
எங்கள் வீட்டு குலதெய்வமே
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது!
உண்ணாமல் உறங்காமல்
உனையிழந்து
ஓர் திங்கள் ஆனதுவோ...?
என்ன கொடுமையிது
இறைவனுக்கும்
இதயமில்லை
உன் உயிரில் பாதி
தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே
நீ பட்ட
துன்பம் காண்கின்றேன்..
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.