யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரையர் சின்னம்மா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 01-05-2023 திங்கட்கிழமை அன்று காலை 05:00 மணியளவில் நடைபெற்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அஸ்தி கரைக்கப்படும். அதனைத் தொடர்ந்து அன்னாரது இல்லத்தில் மதியம் 12:00 மணியளவில் நடைபெறும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.