30ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ் . வடலியடைப்பு அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிராங்புட் ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு துரையப்பா மற்றும் திருமதி அன்னலட்சுமி அவர்களின் புதல்வன் யோகேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு
எங்களின் இறைவனாய்- என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.
முப்பது ஆண்டுகள் போனாலும்
முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள் அழியாமல்
இருக்க வேண்டும் என்பதால்
வாழ்நாள் முழுவதும் நினைக்கும்
போதெல்லாம் உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் உங்கள் நீங்காத நினைவுடன்
தகவல்:
சகோதர சகோதரிகள், மருமக்கள், பெறாமக்கள்
எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் மங்களேஸ்வரன் குமரேசு