Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 14 DEC 1947
இறப்பு 26 MAY 2024
திரு துரைச்சாமி சுந்தரலிங்கம்
(பிரபல வர்த்தகர் - Sri Rangan Trading Company)
வயது 76
திரு துரைச்சாமி சுந்தரலிங்கம் 1947 - 2024 இறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இறுப்பிட்டி புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி சுந்தரலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள்  31 கடந்தாலும்
ஆறிடுமா உங்கள் நினைவலைகள்!

நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றீர்

தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்

எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவர் இன்று எம்மோடு இல்லை

ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?

காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 25-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து மு.ப 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் இல 37 சேர், பொன் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் (A1 ராஜா கிறீம் கவுஸ்) நடைபெறும் அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

முகவரி:
அரசடி வீதி,
யாழ்ப்பாணம்.

இங்ஙனம், மனைவி, மக்கள், மருமக்கள்
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.