

யாழ். இறுப்பிட்டி புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைச்சாமி சுந்தரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-06-2025
ஓராண்டு காலம்தான் போனாலுமே
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறைந்து விடவில்லை நீங்கள்
என்றும் மனங்களில் வாழ்வீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஸ்ரீ வீரகத்தி விநாயகரையும்,
நயினை நாகபூசணி அம்பாளையும் பிரார்த்திக்கின்றோம்!
Sorry to hear your loss.Please accept our condolences.