Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 04 MAR 1948
விண்ணில் 15 AUG 2024
திரு துரைராஜா கனகரத்தினம்
வயது 76
திரு துரைராஜா கனகரத்தினம் 1948 - 2024 இளவாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இளவாலை முள்ளானையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் முள்ளானை, கோண்டாவில், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா கனகரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு எங்களின்
இறைவனாய்- என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.

முப்பத்தொன்று நாட்கள் போனாலும்
முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!

நாட்கள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த

உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி மற்றும் மதிய போசன நிகழ்வு 21-09-2024 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Sri Sathya Sai Baba Centre of Scarborough, 5321 Finch Ave E Scarborough  ON M1S 5W2 எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரமேஸ் - மருமகன்
கீதாகரன் - மருமகன்
பாலா - சகோதரன்
கௌசல்யா - மகள்
அகல்யா - மகள்
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.