யாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா ஜெகதீசன் அவர்களின் அந்தியேட்டி, வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்தவுடன் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் உடனடியாக எம்மில்லம் நாடி ஓடி வந்து வேண்டிய உதவிகள் செய்த உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும், துக்கம் விசாரித்தவர்களுக்கும், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், மரணச்சடங்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், மலர்வளையங்கள் வைத்து சாந்தி அஞ்சலி செலுத்தியவர்கள் இன்னும் ஏனைய நெஞ்சங்கட்கும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அந்தியேட்டிக் கிரியை 23-10-2019 புதன்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தொடர்ந்து 12:00 மணியளவில் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் கல்யாண மண்டபத்திலும்(கே.கே.எஸ் வீதி, நாச்சிமார் கோவில்) நடைபெற இருக்கின்றது.
இவ்வுலக வாழ்வை விட்டு இறைவனின் திருவடியை அடைந்த அமரர் துரைராஜா ஜெகதீசனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வண்ணை நொச்சியம்பதி அம்மனை வேண்டுகிறேன். அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின்...