
யாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா ஜெகதீசன் அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், துரைராசா(பலூன்) புஸ்பராணி தம்பதிகளின் அன்பு புதல்வரும், குணபாலசிங்கம்(நீர்வேலி) அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயந்தா(செல்லா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கபிலன், கரணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவகரன்(கரன்) , பிரியவதனி(பிரியா- பிரான்ஸ்), மதிவதனி(வதனி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
விமலநாதன்(ஐயன்- பிரான்ஸ்), சதீஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கர் டேசி, தர்சன், டிலக்சன், தனுசா, சந்தோஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்.
இவ்வுலக வாழ்வை விட்டு இறைவனின் திருவடியை அடைந்த அமரர் துரைராஜா ஜெகதீசனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வண்ணை நொச்சியம்பதி அம்மனை வேண்டுகிறேன். அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின்...