Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 22 JUL 1941
மறைவு 19 JAN 2024
திரு துரைராசா குணபாலசிங்கம் (சின்ராசு)
வயது 82
திரு துரைராசா குணபாலசிங்கம் 1941 - 2024 சங்கானை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரடி கஸ்தூரியார் வீதியை வசிப்பிடமாகவும், வட்டுவினி இணுவில் மேற்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட துரைராசா குணபாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக் கிரியைகள் 16-02-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். 

எங்களது தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
இணுவில் மேற்கு,
 இணுவில் வட்டுவினி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்