யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், புத்தூர், நெல்லியடி, லண்டன் Hayes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 13-05-2020 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.
We are honored and blessed to have known this beautiful condolences. We the Ealing Shri Kanaga Thurkai Temple Priests, Trustees, Executive Committee members and all devotees and friends will...