Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUL 1951
இறப்பு 13 APR 2020
அமரர் துரைராஜா பாலசுப்பிரமணியம்
Solicitor
வயது 68
அமரர் துரைராஜா பாலசுப்பிரமணியம் 1951 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 47 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், புத்தூர், நெல்லியடி, லண்டன் Hayes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  துரைராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சிந்துஜா, சிந்துதார்த்தன், கங்காசுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜராஜேஸ்வரி, இரஞ்சினி, இராகினி(ஓய்வுநிலை ஆசிரியை), நந்தினி(பிரான்ஸ்), நகுலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காஷினி(லண்டன்), துஷாரா(லண்டன்), பார்த்திபன்(அவுஸ்திரேலியா), சாருஜா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற விவேகானந்தன்(கொழும்பு), இராமச்சந்திரன்(அவுஸ்திரேலியா), சிவக்குமார்(கனடா) மற்றும் ரவி(கனடா), குகநாதன்(பிரான்ஸ்), சாரதா(லண்டன்)  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2020 வியாழக்கிழமை அன்று காலை நடைபெற்று பின்னர் Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom எனும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வில் 10 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

தகவல்: குடும்பத்தினர்