Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 SEP 1941
இறப்பு 31 DEC 2023
அமரர் துரையப்பா மங்கையற்கரசி 1941 - 2023 சிங்கப்பூர், Singapore Singapore
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை கல்லூரி ஒழுங்கை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா மங்கையற்கரசி அவர்கள் 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா முத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

இராஜேஸ்வரி(ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற வசந்தகுமார்(அப்பு வாத்தியார்- ஓய்வுநிலை ஆசிரியர்), குணசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மேரிதிரேஸ்(ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்), காலஞ்சென்ற விஜயரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபராஜ்(பொதுச் சுகாதாரப் பரிசோதகர்), பெனெற் பிருதிவிறாஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அன்ரன்றாஜ் அவர்களின் பாசமிகு பெரியதாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
47, கல்லூரி ஒழுங்கை,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்