Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 MAY 1950
இறப்பு 14 MAY 2020
அமரர் துரையப்பா கனகசுந்தரம்
வயது 69
அமரர் துரையப்பா கனகசுந்தரம் 1950 - 2020 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு இணுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு வத்தளயை  வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா கனகசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்னை விட்டு மறைந்தாலும்- எம்
நெஞ்சை விட்டு மறைவதில்லை!
கண்முன்னே வருவாயா
கதறுதிங்கே உறவையா!

நீயறியா வேளையிலே
மண்ணை விட்டுச்சென்றாயே!
கண் விழித்துப் பார்த்திருப்பாய்
கதறி நீயும் அழுதிருப்பாய்!

இறைவனின் சன்னிதியில்
இரு கரம் கூப்பி நிற்பாய்- உன்
உறவுகளைக் காண்பதற்காய்
மறுபிறவி கேட்டு நிற்பாய்

ஐயாவை நாம் நினைத்தால்
ஆன்மாவே கலங்குதையா!
இறையவனின் கண் கலங்கும்
இழப்பு உந்தன் இழப்பையா!

இழப்புகளும் அழிவுகளும்
இயற்கையின் நியதியையா!
நீ இல்லை என்கையிலே- எங்களுக்கு
உலகமே இல்லை ஐயா! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதீபா - மகள்
மங்கையர்க்கரசி - மனைவி