யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா சிங்கராயர் அவர்களின் நன்றி நவிலல்.
அன்பை ஊட்டி அறிவுக்கு வழிகாட்டி துன்பத்திலும், இன்பத்திலும்,
எம்மைக் காத்து வழிநடத்தி எமக்குரிய சகல நன்மைகளுக்கும்
ஈடு இணையாக இருந்து உறவினில் கலந்த என் அன்னையே
உங்கள் உறவிற்காக ஏங்குகின்றோம் அம்மா!
எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே அம்மா!
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே அம்மா!
31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அம்மா!
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அம்மா!
தரணியில் உம்மை எப்போ காண்போம் அம்மா!
உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.