யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோமாஸ் தொம்மாசி அவர்களின் நன்றி நவிலல்.
அழகே உருவான எங்கள் அன்புத்தாயே
31 நாட்கள் கடந்து விட்டதே நீர்
எம்மை விட்டுச்சென்று, எங்களுக்கு
வாழ்வு கொடுத்த அரும் பெரும் தாயே
மின்னல் போல் மறைந்த உம்மை இனி
என்று காண்போம் அம்மா, ஆறவில்லையே
எங்கள் துயரம், மீளாத்துயில் நீங்கி
மீண்டும் வரமாட்டீரா என ஏங்குகின்றோம்
அம்மா நீர் வாழ்ந்த காலம் போதுமென்றோ
எம்மை தவிக்க விட்டுச் சென்றீர்?
துடிக்கின்றதே எம் மனம் நீர் எங்களுக்கு
தந்த அன்பு, பாசம், படிப்பினைகள்
இனி யார் தருவார் என எண்ணித்
தவிக்கின்றோம் அம்மா
உன் அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்
எங்களைப் பெற்று அன்போடு வளர்த்த
அன்னைக்கு பலகோடி நன்றிகள் அம்மா
அடுத்த பிறவியிலும் உமக்கே நாங்கள்
பிள்ளைகளாக பிறக்கவேண்டும் அம்மா
இன்னும் எத்தனை நாட்கள் சென்றாலும்
நாம் வாழும் காலம் வரை நீங்கள் தந்த
நல் நினைவுகளுடன் என்றும் வாழ்வோம்
எம் அன்புத்தாயே
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம் அம்மா
எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு தொலைபேசியுடாகவும், மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதலும் அனுதாபமும் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மற்றும் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகளுக்கும் தற்கால சூழ்நிலையிலும் எங்கள் தாயாரின் இறுதி திருப்பலியிலும், நல்லடக்கத்திலும் கலந்து அஞ்சலி செய்த அன்பு உறவுகளுக்கும்இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.