யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு, சுவிஸ் Bern Köniz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா செல்வராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
நாட்கள் 31 ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கு
ம்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி
எம்மை காத்து
வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில் நீர்க்கோலம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ
உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
.அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 20-12-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Europaplaty-1, 3008 Bern Schweiz அருள்மிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்ட்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
May your soul find peace and rest. Your light will continue to shine in the hearts of all who loved you.